இலங்கையில் திரவப்பணத்தைப் பயன்படுத்தலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் LANKA QR கட்டணம் செலுத்தல் முறையைப் விரிவாக்குவதற்காக அனைத்து அனுமதிபெற்ற நிதி நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு படிமுறையாக வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முகாமைத்துவம் செய்யப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலைகளில் திரவப்பணத்தின் மூலம் கட்டணம் செலுத்தும் நுழைவாயில்களில் LANKA QR கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தத்தமது கைத்தொலைபேசியில் குறித்த தொகையைக் குறித்துக்கொண்டு எந்தவொரு வங்கியின் நிகழ்நிலை நடமாடும் கட்டண செயலி மூலம் கட்டணங்களை அறவிடுவதற்கு நுழைவாயிலில் காணப்படும் QR குறியீட்டை அலகீடு செய்வதன் மூலம் 8-10 செக்கன்களில் குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு, அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு இயலுமை கிட்டும்.
அதற்கமைய, குறித்த செலுத்தல் முறையை அமுலாக்குவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
The post அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிட புதிய முறை appeared first on MASS EDUCATION.
from MASS EDUCATION https://ift.tt/3nOsz5z
via IFTTT
Post a Comment
Post a Comment